×

பழைய மூணாறில் உள்ள சிறுவர் பூங்காவை திறக்க கோரிக்கை

மூணாறு, நவ. 28: மூணாறில் திறப்பு விழா கண்ட பிறகும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறில் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பழைய மூணாறில் உள்ள ஹைடல் பூங்காவில் சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள ஹெட் ஒர்க்ஸ் அணையை ஒட்டி எட்டு ஏக்கர் பரப்பளவில் ஹைடல் பூங்கா உள்ளது. இதனை மின்வாரியத்தினர் பராமரித்து வருகின்றன.

இந்த சிறுவர் பூங்காவில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் தலைமையில், 3.65 கோடி ரூபாய் மதிப்பில் சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் சிறுவர்களுக்கு 14 வகை பொழுது போக்கு அம்சங்களுடன், ஓய்வு பகுதி, இருக்கைகள், செல்ஃபி பாயின்ட், பூந்தோட்டம் மற்றும் ஊஞ்சல்கள் உள்ளன. பழைய மூணாறில் உள்ள டேக் எ பிரேக் முதல் ஹைரேஞ்ச் கிளப் தொங்கு பாலம் வரை 450 மீட்டர் தொலைவில் முதிரப்புழை ஆற்றின் கரையில் புதிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

மூணாற்றின் அழகையும், குளிரையும் ரசிக்கும் வகையில் இந்த ஆற்றங்கரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பூந்தோட்டங்கள், மின் அலங்காரங்கள் மற்றும் இருக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகைக்காக இந்த பூங்காவின் திறப்பு விழா ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்டது
ஆனாலும் அது இதுநாள்வரை செயல்பாட்டிற்கு வராமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நடந்தும் பயன்பாட்டிற்க வராத இந்த பூங்காவால் அரசிற்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் சிறுவர் பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

The post பழைய மூணாறில் உள்ள சிறுவர் பூங்காவை திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Munnar ,Dinakaran ,
× RELATED மூணாறில் காரை சேதப்படுத்திய காட்டுயானைகள்: பொதுமக்கள் பீதி