×

பள்ளி மாணவிகள் கல்வியை தொடர தொண்டியில் மகளிர் கலை கல்லூரி பொதுமக்கள் வலியுறுத்தல்

தொண்டி: தொண்டியை மையமாக வைத்து இப்பகுதியில் மகளிர் கலை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரசினர் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி பல உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூர், நம்புதாளை முதல் எஸ்.பி.பட்டிணம் வரையிலும் வருடத்திற்கு பல, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளி படிப்பை முடிக்கின்றனர். இதில் குறிப்பிட்ட சிலரே மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட நகர் பகுதியில் கல்லூரி கல்வியை தெடர்கின்றனர். தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம், மீன்பிடி தொழில், சிறு வியாபாரிகள் என நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் வசிக்கினர்.

இங்கு கல்லூரி இல்லாததால் அதிகம் செலவு செய்து மேல் படிப்பிற்கு அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். பள்ளி படிப்போடு முடித்துக் கொள்வதில் பெரும் பகுதி பெண்கள் அடங்குவர். அதனால் தொண்டியில் மகளிர் கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தொண்டியில் செயல்பட்ட மாலை நேர கல்லூரி மற்றும் கடலியல் கல்லூரி தற்போது செயல்பட வில்லை. இது குறித்து சாதிக் பாட்ஷா கூறியது, தொண்டியில் பிளஸ் 2 வரையிலும் இருப்பதால் தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதி பெண்கள் அனைவரும் பள்ளி படிப்பை முடித்து விடுகின்றனர். கல்லூரி எதுவும் இல்லாததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவிக்கின்றனர். தமிழக அரசு இப்பகுதி மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு தொண்டியில் பெண்கள் கல்லூரி துவக்க வேண்டும் என்றார்.

The post பள்ளி மாணவிகள் கல்வியை தொடர தொண்டியில் மகளிர் கலை கல்லூரி பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thondiil Women's Arts College ,Thondi ,Thondi Women's Arts College ,Dinakaran ,
× RELATED தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது