பள்ளி மாணவர்களுக்கு பரிசு

 

சிவகங்கை, ஜூலை 17: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், மானாமதுரை ஒன்றிய துணைத்தலைவர் முத்துச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் சேவியர், நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.

நாட்டரசன்கோட்டை கேஎம்எஸ்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாளர் சுப்பையா தலைமை வகித்தார். தலைமையாசிரியை மகாலெட்சுமி வரவேற்றார். விரிவுரையாளர் பொன்வடிவு சிறப்புரையாற்றினார். மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியை லதா நன்றி கூறினார். கவுரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வெண்ணிலா, கல்வியாளர் சரவணசங்கர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியைர் ஜான்பீட்டர் நன்றி கூறினார்.

The post பள்ளி மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: