திருப்பரங்குன்றம், ஆக. 15:மதுரை, திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றம் இந்திரா காந்தி நினைவு ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தாய் தந்தையை இழந்த சுமார் 65க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் அனைவருக்கும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலரான ஆன்மீக செம்மல் வ.சண்முகசுந்தரம் நேற்று இலவச சீருடை, நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குப்புமணி, ஆசிரியர்கள் கலா, சண்முகசுந்தரி, மகேஸ்வரி, கவிதா, வினோத்குமார், சாந்தி, வீரகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல் appeared first on Dinakaran.