- பள்ளி மாணவர்களுக்கான ஆதார் பதிவு மையங்கள்
- திருவள்ளூர்
- திருவள்ளூர் யூனியன்
- ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் ஆட்சியர்
- கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம்
- என் சுகபுத்ரா
- ஒருங்கிணைந்த பள்ளிவாசல்
- தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் பள்ளி...
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள ஆர். எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் என்.ஒ.சுகபுத்ரா ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஆதார் பதிவு மையங்களையும், ஆதார் பதிவுகளையும் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆர்.எம். ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை எல்காட் நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து துவக்கி வைத்தது. அதிக ஆதார் எண் பெறப்படாத பகுதிக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய ஆதார் பதிவு மற்றும் பிழைத்திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்படும். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஆதார் மையங்கள் செயல்பட உள்ளது. இவ்வாறு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா தெரிவித்தார்.
The post பள்ளி மாணவர்களுக்கான ஆதார் பதிவு மையங்கள்: கூடுதல் கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.