பல்லடத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

 

பல்லடம், ஜூலை 22: பல்லடம் வட்டாட்டசியர் அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூர் ஊராட்சி மந்திரிபாளையத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் தனது 4 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு கடந்த பல மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் கொடுத்து அதற்கு கேத்தனூர் கிராம நிர்வாக அலுவலர், நில அளவர் ஆகியோர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு தான் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தாகவும் முழு தொகை தரவில்லை என்றும், பட்டா மாறுதல் செய்து தரவில்லை காலதாமதம் ஆகி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மழை காலம் தொடங்க இருப்பதால் விசை தானியங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். அதே போல் உழவு கருவிகள் மூலம் விதைப்பு செய்வதற்கு குறைந்த வாடகையில் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பல்லடத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: