×

பல்லடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

 

பல்லடம், டிச.16: பல்லடம் நகராட்சி 9வது வார்டு பட்டேல் வீதி பகுதியில் நகர திமுக அலுவலகம் அருகில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துதல் பணி தொடக்க விழாவிற்கு நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் சுகுமாரன் வரவேற்றார். இவ்விழாவில் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்வில் நகராட்சி கவுன்சிலர்கள் பபிதா கயாஸ்அகமது, தண்டபாணி, முன்னாள் கவுன்சிலர் ஜெகதீஷ், நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகர திமுக அவைத்தலைவர் நடராஜன், துணை செயலாளர் வேலுமணி, பொருளாளர் குட்டி பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி கெளஸ்பாட்ஷா, கயாஸ்அகமது, வார்டு செயலாளர்கள் குமரேசன், கலிலூர் ரஹமான், அஷ்ரப் தீன், மார்க்கெட் தங்கவேல், ஜாகீர்உசேன், நகர இளைஞரணி துணை செயலாளர் சிலம்பரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பல்லடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Palladam ,Palladam Municipality 9th Ward Patel Road ,DMK ,Dinakaran ,
× RELATED மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு ஒட்டுனர்கள் வலியுறுத்தல்