செய்முறை:;பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு. பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி; பலாப்பழத்தை வேகவைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின்; ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி, நன்கு கொதித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு; இறுதியில் ஒரு தேக்கரணடி நெய் சேர்த்து இறக்கவும். சுவையான பலாப்பழ பாயாசம் தயார்.
The post பலாப்பழ பாயாசம் appeared first on Dinakaran.