பருத்தியில் களைகளை கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்: விவசாயிகளுக்கு ஆலோசனை

 

அரவக்குறிச்சி, ஜூலை13: கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பருத்தியை ஆர்வமுடன் பயிட்டு வருகின்றனர். இவர்களுக்கு பருத்தி பயிரில் களைகளை கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள் பற்றி விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க கரூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: பருத்தியில் களைகளை கட்டுப்படுத்த மறைமுகமான சில உழவியல் முறைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம் பயிர் செய்தல், தரிசு விடுதல் முதலியவை ஆகும். அடர்த்தியான தீவனப்பயிர் (அல்லது) பயறு வகை போன்றவற் றையும் இடையுழவு செய்யக்கூடிய பயிர்களையும் பயிர் செய்தல் களைகளை குறைக்கப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

பயிரிட்ட 45 வது நாளில் கையால் களை எடுத்தல். எக்டருக்கு 3.3 லிட்டர் பெண்டிமெத்தன் (அல்லது) புளூகு கட்டுப்படுத்தலாம். குளோரலின் 2.2 லிட்டர் இவற்றில் ஏதாவது ஒரு களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்த வேண் டும்.பருத்தி விதைத்த 3ல் இருந்து 5 நாட்களுக்குள் 300 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளிப்பதற்கு என்று தனியாக ஓர் தெளிப்பான் வைத்துக் கொள்ளவேண்டும். உலோகத்தினாலான தெளிப்பான்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. களைக்கொல்லி 30 நாட்கள் வரை களை களை கட்டுப்படுத்தும்.

பின்பு 45வது நாள் கைக்களை எடுத்து மண் அணைத்து களையைகட்டுப்படுத்தலாம்.பருத்தியை நீண்ட வரிசைகளில் விதைக்கும் போது, விதைத்த 30-35 நாட்களில் கொண்டிக் கலப்பைக் கொண்டு ஊடுழவு செய்யவும். பத்து நாட்களுக்குப் பிறகு நாட்டுக்கலப்பை மூலம் சாலெடுத்துப் பிறகு பார் கலப்பை மூலம் பார் பிடிப்பது நன்கு கட்டுப்படுத்துவதுடன் குறைந்த செலவில் மண் அணைத்து உரமிடவும் வழிச்செய்கிறது. இதனால் மகசூல் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பருத்தியில் களைகளை கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்: விவசாயிகளுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: