பரமக்குடியில் ரூ.57 கோடி மதிப்பில் தலைமை மருத்துவமனை: கட்டிடப்பணிகள் தொடங்கியது

 

பரமக்குடி, அக். 16: பரமக்குடியில் புதிதாக 57 கோடி செலவில் கட்டப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி தொடங்கியது. பரமக்குடி பகுதி காட்டு பரமக்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையானது அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன் ஏற்பாட்டில் பரமக்குடி அரசு மருத்துவமனையானது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுமான பணிகளுக்காக ரூ.57 கோடி நிதி ஒக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களுக்குள் கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது. ஆகவே பழைய அரசு மருத்துவ மனையை ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்படும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆப்ரேஷன் தியேட்டர்கள், பரிசோதனை அறைகள், எக்ஸ்ரே அறைகள், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் சிகிச்சை அறைகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மருத்துவ மனையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

கீழ் தளம் மற்றும் 4 மேல் தளங்கள்கட்டப்படுகிறது. கட்டுமானப் பணி துவங்கப்பட்டு 21 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி களை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் குருதி வேல்மாறன், செயற்பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

The post பரமக்குடியில் ரூ.57 கோடி மதிப்பில் தலைமை மருத்துவமனை: கட்டிடப்பணிகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: