பணம் திருடிய சிறுவன் கைது

திருச்சி, ஆக.20: திருச்சியில் பஸ்சில் வாலிபரின் சட்டைப்பையில் பணம் திருடிய 17 வயது சிறுவனை போலீசார் கைது காப்பகத்தில் அடைத்தனர். திருச்சி ராம்ஜிநகர் அடுத்த நவலூர் குட்டப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (27). இவர் சென்னை செல்வதற்காக ராம்ஜிநகரில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்தார். பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் சட்டைபையை பார்த்தபோது ரூ.300 மாயமாகி இருந்தது. இதுகுறித்து, கனகராஜ் கொடுத்த புகாரின்பேரில் கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து கனகராஜிடம் இருந்து பணத்தை பிக்பாக்கெட் அடித்த துவாக்குடியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post பணம் திருடிய சிறுவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: