பட்டாசு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஓசூர், ஆக.7: ஓசூர் அட்ேகா போலீஸ் ஸ்டேஷனில், பட்டாசு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன், பட்டாசு கிடங்கில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்டத்திலுள்ள பட்டாசு கடைகளை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் ஆய்வு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஓசூர் மாநகராட்சி அட்காே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இந்த கடை வியாபாரிகளுக்கு அட்காே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

இதில் மின்வாரிய அதிகாரிகள், விஏஓ உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, பட்டாசு கடைகள் நடத்த வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசு கடைகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பட்டாசுகளை வைத்திருக் கூடாது. பட்டாசு வைத்திருக்கும் பகுதியில் தண்ணீர், மணல், தீயணைக்கும் கருவி கட்டாயம் வைக்க வேண்டும். மேலும் மின்சாரம் சம்பந்தமாக குறைபாடுகள் இருந்தால், உடனடியாக சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் போலீஸ் எஸ்ஐ சபரிவேலன் மற்றும் பட்டாசு கடை வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post பட்டாசு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: