பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

 

ஊத்துக்கோட்டை, அக். 23: ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் பட்டாசு கடை வியாபாரிகள் பட்டாசுகளை விற்பனை செய்ய உரிமம் பெற்று அதற்கான கடைகளை தயார் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாலதி மற்றும் தாசில்தார் லதா, வருவாய் ஆய்வாளர் ஹேமகுமார், தொழிலாளர் நலத்துறை இளநிலைப் பொறியாளர் கோவிந்தராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா, சுகாதார ஆய்வாளர் ஜெயசூர்யா மற்றும் சப் – இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் ஊத்துக்கோட்டையில் 4 கடைகளையும், பெரியபாளையம், கன்னிகைப்பேர், பாகல்மேடு ஆகிய பகுதியில் 4 கடைகளும் என 8 கடைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம், கடைகளுக்கு உரிமம் உள்ளதா, தீ விபத்து தடுப்புக் கருவிகள் காலாவதியாகாமல் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். மேலும் தீப்பிடித்தால் எந்தெந்த பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். ஆவடி: ஆவடி, திருமுல்லைவாயல் திருநின்றவூர், பட்டாபிராம் சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை பட்டாசு கடைகள் திறக்க 20 கடைகள் அனுமதி கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், துணை ஆட்சியர் மதுசூதனன் தலைமையில் ஆவடி வட்டாட்சியர் தீயணைப்பு அலுவலர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.

மேலும், கடைகளில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், பட்டாசு விற்பனை செய்யும் உரிமம் உள்ளிட்டவை சரி பார்க்கப்பட்டது. இதில், கடையின் அருகே பள்ளிகள் இருக்கின்றதா? மின்மாற்றிகள் உள்ளதா? கடைக்கு இரு வழிகள் உள்ளதா? நிரந்தர கட்டிடமா என விசாரணையும் நடத்தினர். கடந்த ஆண்டு பட்டாசு கடைகள் ஏற்பட்ட விபத்துகளின் எதிரொலியாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கணிசமாக பட்டாசு கடைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: