பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு

 

திருப்பூர், நவ.11: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசபயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய 2023ம் ஆண்டுத் திட்ட படி, பட்டதாரி ஆசிரியர் 2222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30ம் தேதி ஆகும்.

மேற்படி தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக 27ம் தேதி அன்று தொடங்கப்படவுள்ளது. இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு தங்களது சுய விவரத்தினை https://forms.gle/gsZtU6Quse6iG71XA என்ற லிங்க் மூலமாக முன்பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: