×

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் திண்டுக்கல்லில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஆக. 24: திண்டுக்கல் நாகல் நகரில் திராவிட கழக இளைஞரணி சார்பில் நேற்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணை செயலாளர் கமல்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், செயலாளர் பாண்டியன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செல்வம், மாநகர செயலாளர் கருணாநிதி, தலைவர் மாணிக்கம், மாவட்ட இணைச்செயலாளர் காஞ்சி துரை முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தலைமை கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் வீரபாண்டியன், செயலாளர் ஆனந்த் முனிராஜன், பேரவை செயலாளர் நாகராஜன் வாழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.

The post நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் திண்டுக்கல்லில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dravida Kazhagam ,Dindigul ,Dindigul Nagar ,
× RELATED நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை