திருப்பூர், அக்.21: திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவருமான இல. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அறிவுருத்தலின்படி, தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை இன்று (21ம்தேதி) இளைஞர்களின் எதிர்காலம், கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், சிவரஞ்சினி மஹாலில் காலை 9 மணியளவில் தொடங்க உள்ளோம். எனவே மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தாங்கள் கையெழுத்திட்டு நீட் தேர்வு எதிர்ப்பினை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியிருந்தார்.
The post நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் appeared first on Dinakaran.