நியாய விலைக்கடைகளில் ₹60க்கு தக்காளி விற்பனை: வாங்கி பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர், ஆக. 3: தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதனை தொடர்ந்து தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு பசுமை பண்னை கடைகள் மற்றும் நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
ஆனாலும் தக்காளி விலை குறையாத காரணத்தால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் பேரில் தற்போது மாநிலம் முழுவதும் செயல்படும் நியாய விலைக்கடைகளில் 500 கடைகளில் தக்காளி கிலோ ₹60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், பெரும்பாக்கம், மாபொசி. சாலை, லங்காகரத் தெரு, பிரயாங்குப்பம், திருநின்றவூர், பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிப் பேட்டை, திருத்தணி 1ஏ, திருத்தணி 1பி, ஸ்ரீசுப்பிரமணி சுவாமி கூட்டுறவு பண்டக சாலை கடை 1ஏ, மாதர்பாக்கம், காரனோடை, திருவேங்கடபுரம், பாடியநல்லூர், மற்றும் பொன்னேரி ஆகிய 15 நியாய விலைக்கடைகளில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ₹60 க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post நியாய விலைக்கடைகளில் ₹60க்கு தக்காளி விற்பனை: வாங்கி பயன்பெற கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: