நாய்கள் கடித்து 2 ஆடுகள் பலி

இடைப்பாடி, பிப்.26: இடைப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபி (40). மரம் அறுக்கும் தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா, 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்தார். காலையில் பார்த்த போது இரண்டு ஆடுகள், நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தது. இதற்கு முன்பு ஆலச்சம்பாளையம், காட்டூர் கந்தபிள்ளையார் கோயில் பகுதியில் இரவு நேரங்களில் ஆடுகளை கடித்து கொன்று விட்டு சென்றுள்ளது.

The post நாய்கள் கடித்து 2 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: