நாடு எப்போது சீனா குறித்து விவாதம் நடத்தும்: பிரதமருக்கு காங்.தலைவர் கார்கே கேள்வி

புதுடெல்லி: எல்லையில் சீனாவுடன் நிலவும் சூழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு பிரதமர் மோடி அனுமதிப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் அருணாசலப்பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டாரில் இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவ வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.ஆனால் நாடாளுமன்றத்தில் எல்லையில் சீனாவுடனான மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில்,” டோக்லாமில் இருந்து ஜாம்பேரி ரிட்ஜ் வரை சீனா கட்டமைப்பது வடகிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலான இந்தியாவின் சிலிகுரி காரிடரை அச்சுறுத்துகிறது. இது நமது தேசிய பாதுகாப்பிற்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. நரேந்திர மோடி ஜீ எப்போது சீனா குறித்த விவாதம் நடத்துவதற்கு அனுமதிப்பீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்….

The post நாடு எப்போது சீனா குறித்து விவாதம் நடத்தும்: பிரதமருக்கு காங்.தலைவர் கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: