நாகப்பட்டினம்,அக்.6: நாகப்பட்டினத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் வசூல் செய்த ரூ.1.50 லட்சத்தை எஸ்பி ஹர்ஷ்சிங் வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கடந்த 2016ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். மன்னார்குடி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த பிரவீன்குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில் இவருடன் கடந்த 2016ம் ஆண்டு பணியில் சேர்ந்த 8 ஆயிரத்து 500 காவலர்கள் இணைந்து 2016 காக்கும் கரங்கள் என்ற வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் நிதி வசூல் செய்தனர்.
இவ்வாறு வசூல் செய்த தொகையை நேற்று நாகப்பட்டினம் எஸ்பி ஹர்ஷ்சிங்கிடம் ஒப்படைத்தனர். எஸ்பி உயிரிழந்த பிரவீன் குமார் குடும்பத்தை எஸ்பி அலுவலகத்திற்கு வரவழைத்தார். அங்கு ரூ.9.50 லட்சம் நிதியை ஒப்படைத்தார். இதுபோல் அசாதாரமான சூழ்நிலையில் உயிரிழந்த 12 காவலர்களின் குடும்பத்திற்கு 2016 காக்கும் கரங்கள் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 954 நிதி திரட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post நாகப்பட்டினத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு வாட்ஸ்அப் குழு ரூ.1.50 லட்சம் நிதி appeared first on Dinakaran.