மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சட்ட விதிகளை மீறி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்துள்ளது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தைக் காட்டுகிறது. மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகிறது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே - என்று தமிழ்நாட்டு உணர்ச்சியை தட்டி எழுப்பிய எழுச்சி கவிஞர் பாரதியார் பிறந்த தினம் இன்று. அவர் பிறந்த எட்டயபுரம் இல்லத்தை அரசு இல்லமாக்கி, தலைநகர் சென்னையில் அவருக்கு சிலை வைத்து பெருமைப்படுத்தியது திமுக அரசு. இன்றைய நாட்டு நிலைமையை நினைக்கும் போது ‘’என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’’ என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன. வாழ்க பாரதி புகழ். பெறுக அவர் சொன்ன உயர்வு.

Related Stories: