×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி சராசரியாக 21.69% வாக்குகள் பதிவு

சென்னை: தமிழகத்தில் பேரூராட்சிகளில் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி வரை பெரும்பாலான பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு 30 சதவீதத்தை தாண்டியுள்ளது. கரூர் மாவட்டம் பழைய ஜெயன்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் காலை 11 மணி வரை 53% வாக்குகள் பதிவாகியுள்ளன.மேலும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 50% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நகராட்சிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாநகராட்சிகளில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி வரை சென்னையில் சுமார் 10% வாக்குகள் மட்டுமே பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் இனிமேல்தான் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமின்றி வேறு சில மாநகராட்சிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி வரை தூத்துக்குடியில் 21.53% வாக்குப்பதிவும், ராணிப்பேட்டையில் 21% வாக்குப்பதிவும், அரியலூரில் 30.79% வாக்குப்பதிவும், ராமநாதபுரத்தில் 23.95% வாக்குப்பதிவும், கன்னியாகுமரியில் 21% வாக்குப்பதிவும், நாகப்பட்டினத்தில் 22.52% வாக்குப்பதிவும், செங்கல்பட்டில் 10.65% வாக்குப்பதிவும், திருப்பூரில் 22% வாக்குப்பதிவும், சேலத்தில் 27.60% வாக்குப்பதிவும், தருமபுரியில் 26.61% வாக்குப்பதிவும், விழுப்புரத்தில் 28.85% வாக்குப்பதிவும்,கள்ளக்குறிச்சியில் 29% வாக்குப்பதிவும், ஈரோடு 21.64% வாக்குப்பதிவும், திருச்சி 29% வாக்குப்பதிவும், மதுரை 17.91%, கோவை 21.07%, நெல்லை 23.92%, திருவாரூர் 26.45%, சிவகங்கை 26.96%, கடலூர் 25.44%, கிருஷ்ணகிரி 23.42% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி சராசரியாக 21.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி சராசரியாக 21.69% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு: ஓபிஎஸ் வலியுறுத்தல்