கூடலூர், மார்ச் 19: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவிகள் ஆதித்யா, அபிராமி, அபிரூபா, அனகாராஜ், அன்பரசி, அனுஸ்ரீ, அஷ்வினி, பானுபிரியங்கா, கீர்த்தனா, தேவதர்ஷினி தங்களது ஊரகத் தோட்டக்கலை பணி அனுபவப் பயிற்சிக்காக கம்பம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலகத்திற்கு வந்தனர்.
முதற்கட்டமாக அவர்களுக்கு கம்பம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியரானா, தோட்டக்கலை அலுவலர் அன்பழகன் மற்றும் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மோகன்ராஜ், பாலமுருகன் மற்றும் விவேகானந்தன் ஆகியோர்கள் தோட்டக்கலை பயிர்கள் பற்றியும், தொழில்நுட்பங்கள் பற்றியும், முன்னோடி விவசாயிகள் விவரத்துடன் எடுத்துரைத்ததோடு, ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் நோய்களின் கட்டுப்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கிக் கூறி, அதனை விவசாயிகளிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து முதலாவதாக கம்பம் வருவாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி அசோகன் நிலத்தில் இ.எம் கரைசல் தயாரித்து பயிர்களுக்கு கொடுப்பதன் மூலம் உள்ள நன்மைகளை மாணவிகள் செய்முறையுடன் விளக்கிக் கூறினர்.
The post தோட்டக்கலை மாணவிகளுக்கு ஊரக பணி அனுபவ பயிற்சி appeared first on Dinakaran.