நெல்லை: நெல்லையில் தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை ஏறுமுகத்தில் உள்ளன. கத்தரிக்காய் முதல் ரகம் கிலோ ரூ.100ஐ கடந்தது. நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கிய மழை தொடர்ந்து நீடிக்கிறது. தொடர் மழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வரை கத்திரிக்காய்க்கு பெரிய விலை இல்லாமல் இருந்தது. அதிகபட்சம் கிலோ ரூ.20க்கு விற்பனையானது. தீபாவளிக்கு பின்னர் இதன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.கடந்த சனிக்கிழமை கிலோ ரூ.40க்கு விற்பனையான வெள்ளை கத்தரிக்காய் நேற்று வெளிச்சந்ைதகளில் கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரையிலான விலையில் விற்கப்படுகிறது. தனியார் மொத்த காய்கறி சந்தையில் கிலோ ரூ.120க்கு விற்பனையானது. பாளை. உழவர் சந்தையில் அதிகபட்சமாக கிலோ ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் வெண்டைக்காய் சில வாரங்களுக்கு முன்னர் வரை கிலோ ரூ.20க்கு விற்பனையான நிலையில் நேற்று உழவர் சந்தையில் கிலோ ரூ.65க்கும் வெளிச்சந்தையில் கிலோ ரூ.75 முதல் 80 வரையிலும் விற்கப்பட்டது. தக்காளிப்பழம் கிலோ ரூ.60ஆக விற்பனையாகிறது. உழவர் சந்ைதயில் அவரைக்காய் கிலோ ரூ.70க்கும், பீர்க்கங்காய் கிலோ ரூ.25க்கும், மல்லி இலை கிலோ ரூ.60க்கும் விற்பனையானது. குடமிளகாய் கிலோ ரூ.115க்கு விற்கப்படுகிறது. கேரட் கிலோ ரூ.62க்கு விற்கப்படுகிறது.மற்ற காய்கறிகள் விலை ஒரு கிலோவுக்கு உழவர் சந்தையில் விற்கப்பட்ட விபரம் வருமாறு: புதினா ரூ.50, கோவக்காய் ரூ.40, கறிவேப்பிலை ரூ.30, தேங்காய் ரூ.36, உருளை கிலோ ரூ.36, கோஸ் ரூ.22, பீட்ரூட் ரூ.22, பஜ்ஜி மிளகாய் ரூ.85 என்ற விலையில் விற்பனையானது.விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடர் மழையால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. கத்தரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது. மழை ஓய்ந்த பின்னர் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளை பாலீஷ் ரக கத்தரிக்காய் வர வாய்ப்புள்ளது. அப்போது ஓரளவு குறைய வாய்ப்பு உண்டு. பின்னர் பொங்கலுக்கு விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர்….
The post தொடர் மழையால் நெல்லையில் கத்தரிக்காய் விலை சதமடித்தது காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.