தொடர் செயின் பறிப்பு இளைஞருக்கு குண்டாஸ்

 

அரியலூர், நவ.10: தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (38). இவர் மீது அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 18 தேதி செயின்பறிப்பில் ஈடுபட்டது சம்மந்தமாக திருமானுர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 28 ம் தேதி கைது செய்யப்பட்டு அரியலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று, திருமானுர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி எஸ்,பிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, விஜயகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணையிட்டார். இதன்படி நேற்று விஜயகுமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post தொடர் செயின் பறிப்பு இளைஞருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: