திருச்சி: எடப்பாடிக்கு இது சவாலான தேர்தலாகவே அமையும் என்று பா.ஜ செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.திருச்சியில் நேற்று நடிகை குஷ்பு கூறியதாவது:ஜெயலலிதா இல்லாமல் அதிமுக இந்த தேர்தலை சந்திக்கிறது. அப்படியிருக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு புதிய சவாலான தேர்தல் ஆகவே அமையும். தேசிய கட்சிகளில் இருந்து மாநில கட்சிகள் வரை மிகப்பெரிய கட்சிகளாக இருக்கக்கூடிய பாஜகவும், காங்கிரசும், அதிமுகவும், திமுகவும் எந்தக் கட்சிகளும் சமூக வலைதளங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. சமூகம் என்பது ஒரு வழி என்றார்.
