தென்னை வேர்வாடல் நோய் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

பெரியகுளம், செப். 13: தேனி மாவட்ட வேளாண்மை துறை மற்றும் பயிர் பாதுகாப்பு துறை சார்பாக தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு தென்னையில் ஏற்படும் வேர் வாடல் நோய் குறித்த கள ஆய்வு மற்றும் மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார். தேனி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சங்கர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் செந்தமிழ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

வேளாண் இணை இயக்குனர் தனலட்சுமி மற்றும் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். முகாமில் தென்னை சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம் விரிவாக எடுத்து கூறினார். பயிற்சி முகாமில், பயிர் பாதுகாப்புத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் முத்தையா மற்றும் இணை பேராசிரியர் விஜய சாமுண்டீஸ்வரி ஆகியோர் தென்னையில் வேர் வாடல் நோய் மற்றும் அதன் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்கள். இப்பயிற்சியில், தேனி மாவட்ட உதவி வேளாண்மை இணை இயக்குனர்கள் 61 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post தென்னை வேர்வாடல் நோய் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: