தென்னிந்திய அளவில் வெற்றி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

கம்பம்: கம்பம் முகையதீன் ஆண்டவர்புரம் துவக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் முகமது அப்சர். இம்மாணவர் திண்டுக்கல் அச்ஷயுதா பப்ளிக் பள்ளியில் நடந்த தென்னிந்திய அளவிலான கும்டி போட்டியில் முதலிடமும், கட்டா போட்டியில் 2ம் இடமும் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி மேலண்மைக்குழு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மேலாண்மை குழு தலைவர் பிரித்தி தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கம்பம் சாதிக் நகர மன்ற உறுப்பினர், குணசேகர் , பரக்கத்நிஷா , ஷர்ஜிலா பர்வீன் , ஜாஸ்மின் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினர். நிகழ்வில் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள் வெண்ணிலா, தவமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

The post தென்னிந்திய அளவில் வெற்றி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: