மதுரை: இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடமுழுக்கு விழா நடைபெறும் போது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கரூரை சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
