தூத்துக்குடியில் பள்ளி மேலாண் குழு கூட்டம்

தூத்துக்குடி, அக்.15: தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் தூத்துக்குடி நகர்ப்புறத்தில் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் முனியசாமி, வட்டார கல்வி அலுவலர் செல்வகுமார் பங்கேற்றனர். பள்ளி முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மை குழுவோடு இணைந்து செயல்பட்டு குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான கல்வி, பாதுகாப்பு, வளர்ச்சி போன்றவற்றிற்கும் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், உதவிட துணைக்குழுக்கள் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை தவிர்த்தல் குழு, உள்கட்டமைப்பு குழு, உணவு மற்றும் நலத்திட்ட குழு சுகாதார மற்றும் பாதுகாப்பு குழு, விழிப்புணர்வு பிரசாரக்குழு உருவாக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்பு வட்டார அளவில் நடக்கவிருக்கும் மாற்றுத் திறனுடைய இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் தவறாது பங்கேற்பது குறித்து தலைமை ஆசிரியர் ஜூலியா பள்ளி மேலாண் குழு உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

The post தூத்துக்குடியில் பள்ளி மேலாண் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: