தூத்துக்குடி, ஆக. 2: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுதினம் (4ம் தேதி) மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 4ம் தேதி காலை 11 மணிக்கு எனது தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் ஆகியோர் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே இக்கூட்டத்தில் மாவட்ட மீனவர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
The post தூத்துக்குடியில் நாளை மறுதினம் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.