தூத்துக்குடியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, அக். 6: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கருப்பையன், மாநில செயலாளர் ரசல், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் தூத்துக்குடி மாநகர செயலாளர் ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா, சிஐடியு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் அப்பாத்துரை மற்றும் நிர்வாகிகள் முருகன், மாரியப்பன், ரவிதாகூர், கணபதி சுரேஷ், மணவாளன், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் சிஐடியு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: