தூத்துக்குடி,ஏப்.15: அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி தலைமையில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா
ஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் – மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதா
கிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து சிலை முன்பாக அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
இதில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மாநில தலைவர் பொன்குமார், வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மண்டலத்தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், வக்கீல் அணி அமைப்பாளர் குபோ் இளம்பரிதி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், அருணாதேவி, ஜேசையா, பெருமாள், மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், செல்வகுமார், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, சாகுல்அமீது, அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், கருப்பசாமி, சங்கரநாராயணன், மகேஸ்வரன்சிங், வினோத், ரவி, செய்யது காசிம், பெல்லா, தனபால், அரசு வழக்கறிஞர் ஆனந்தகேபிரியேல்ராஜ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராம
கிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயலட்சுமி, இசக்கிராஜா, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், கந்தசாமி, பொன்னப்பன், தெய்வேந்திரன், வட்டச்செயலாளர்கள் டென்சிங், பாலகுருசாமி, செல்வராஜ், மூக்கையா, பொன்ராஜ், சுப்பையா, முத்துராஜா, கதிரேசன், கருப்பசாமி, பொன் பெருமாள், சுரேஷ், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், தொமுச நிர்வாகிகள் முருகன், வேல்முருகேசன், சண்முகராஜ், மரியதாஸ், கருப்பசாமி, இளைஞர் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
The post தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் மரியாதை appeared first on Dinakaran.