தூத்துக்குடியில் உரிமமின்றி செயல்பட்ட மாட்டிறைச்சி கடைக்கு சீல்

தூத்துக்குடி, அக்.7:தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள இறைச்சிக் கடையை ஆய்வு செய்தபோது, அக்கடைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாதது தெரியவந்தது. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுத்த சுமார் 100 கிலோ மாட்டிறைச்சி எலும்புகளை உறைய வைத்து, உறைபனி பெட்டியின் வெப்பநிலை கண்காணிக்கப்படாமல் இருந்தவற்றையும், சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கொழுப்பு உள்ளிட்ட சுமார் 50 கிலோ மாட்டிறைச்சிகளையும் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். அந்த இறைச்சிகளை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி, பினாயில் ஊற்றி, புதைத்தனர். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும்வரை, அந்த இறைச்சிக் கடையில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவும், இறைச்சிக் கழிவு அகற்றுதலில் உள்ள சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்தும் விசாரணை செய்ய ஏதுவாக, அந்த மாட்டிறைச்சிக் கடை மூடி சீல் வைக்கப்பட்டது.

The post தூத்துக்குடியில் உரிமமின்றி செயல்பட்ட மாட்டிறைச்சி கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: