களக்காடு,மார்ச் 3: தேசிய திறனாய்வு தேர்வில் மாவடி மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். களக்காடு அருகே மாவடி இந்து நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி பால ஜெபினா தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவியை தலைமை ஆசிரியர் மதியழகன், பள்ளியின் நிர்வாகி பெட்சி மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.
கூடுதல் பதிவாளர் ஆய்வு
திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியில் கூடுதல் பதிவாளர் (தேர்தல்) கோ.க.மாதவன் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்த்தல், உறுப்பினர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அருகில் துணைப்பதிவாளர்கள் சுப்பையா, முத்துசாமி, கனகசுந்தரி உள்ளிட்டோர் உள்ளனர்.
The post திறனாய்வு தேர்வில் மாவடி மாணவி தேர்ச்சி appeared first on Dinakaran.