திருவெறும்பூர் பகுதியில் துணிகரம் 4 கோயில்களில் தொடர் திருட்டு

திருவெறும்பூர்,ஏப்.19: திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள கோவில்களில் 4 கோயில்களில் நடந்துள்ள தொடர் கொள்ளையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள செல்லாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 16ம் தேதி இரவு நுழைந்த மர்ம நபர்கள் கோயில் பூட்டை உடைத்து உள்ளே அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி மற்றும் பொட்டு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் 17ம் தேதி காலை துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேப்போல் நேற்று திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில், விநாயகர் கோயில், பாளைய மாதாகோவில் ஆகிய 3 கோயில்களில் உள்ள உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் திரவுபதி அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் பொட்டு ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அச்சமடைந்துள்ளனர்.

The post திருவெறும்பூர் பகுதியில் துணிகரம் 4 கோயில்களில் தொடர் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: