திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் நாளை மின்தடை

 

திருத்துறைப்பூண்டி, நவ. 17: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருத்துறைப்பூண்டி உபகோட்டத்திற்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி துணைமின் நிலையத்தில் நாளை (18ம் தேதி) சனிக்கிழமை மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் திருத்துறைப்பூண்டி நகர், வேளுர், பாண்டி, குன்னலூர், எடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொருக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, செருகளத்தூர், தேவதானம், நானலூர் மற்றும் உள்ளடக்கிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: