திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மகா சனிபிரதோஷ வழிபாடு

திருவாரூர், ஜூலை 16: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று சனிபிரதோஷத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் நந்தி பெருமானை தரிசனம் செய்தனர். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன் 3வது நாளில்வரும் வரும் பிரதோஷ நாளில் பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த பிரதோஷம் என்பது மற்ற தினங்களை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாக கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சனி பிரதோஷ தினத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வழிபட்டனர்.

 

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மகா சனிபிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: