நார்த் சவுண்ட்: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 102 ரன் முன்னிலை பெற்றது. ஆன்டிகுவா, ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசிய நிலையில், இலங்கை முதல் இன்னிங்சில் 169 ரன்னுக்கு சுருண்டது. திரிமன்னே 70 ரன், டிக்வெல்லா 32 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட் கைப்பற்றினார். முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 2ம் நாளில் நிதானமாக விளையாடி ரன் குவித்தது.
இலங்கையுடன் முதல் டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை
