திருவட்டார், மார்ச் 13: திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ஜோபிசா (32). இவரது கணவர் கிளிட்டஸ். அதே பகுதியை சேர்ந்தவர் ரெதீஸ் (40). 2 பேரும் உறவினர்கள் ஆவர். சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே 2 பேருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று ரெதீஸ், ஜோபிசாவின் வீட்டு சுற்று சுவரை உடைத்து தகராறு செய்து அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக ஜோபிசா கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து ரெதீஸை கைது செய்தனர்.
The post திருவட்டார் அருகே பெண்ணை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.