×

திருமண மண்டபத்தில் 10 பவுன் நகை துணிகர திருட்டு

 

வடலூர், நவ. 20: திருமண மண்டபத்தில், மணமகள் அறையில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.12 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் உமாபதி(60). இவரது மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக 10 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருமண மண்டபத்தில் வைத்து விட்டு நெய்வேலி வேலுடையான்பட்டு கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

பின்னர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்து மணமகள் அறைக்கு சென்று பார்த்தபோது, 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.12 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி மற்றும் உறவினர்கள், நகை மற்றும் பணத்தை தேடினர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். இது குறித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருமண மண்டபத்தில் 10 பவுன் நகை துணிகர திருட்டு appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Dinakaran ,
× RELATED வடலூர் வள்ளலார் பெருவெளி சைட் ‘பி’யில் மருத்துவமனை கட்ட ஐகோர்ட் அனுமதி!!