திருமணமான ஒரு வருடத்தில் கழுத்தை நெரித்து பெண் கொலை கணவன் போலீசில் சரண்

திருவனந்தபுரம், செப். 21: கேரள மாநிலம் வயநாட்டில் திருமணமான ஒரு வருடத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வெண்ணியோடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி அனிஷா (35). கடந்த வருடம் தான் இவர்களது திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை வெண்ணியோடு போலீஸ் நிலையத்திற்கு சென்ற முகேஷ், தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். வீட்டில் அனிஷா பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post திருமணமான ஒரு வருடத்தில் கழுத்தை நெரித்து பெண் கொலை கணவன் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Related Stories: