சென்னை: அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்கள் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி; தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!
