சேலம் பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது: அதிமுகவை பாஜ தான் இயக்குகிறது. தமிழகத்தை பாஜ தான் ஆட்சி செய்கிறது. தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர், 8 வழிச்சாலை முதல் கெயில் வரை மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறார். சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விட்டனர். கொரோனா சமயத்தில் மாஸ்க் முதல் மயானம் வரை ஊழல் செய்த கட்சி அதிமுக. காவிரி படுகையை, வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது.
கொரோனாவை பயன்படுத்தி மாஸ்க் முதல் மயானம் வரை ஊழல்: மமக தலைவர் ஜவாஹிருல்லா பேச்சு
