திருப்புவனம், டிச.10: திருப்புவனம் அருகே பிரமனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பிரமனூர், வாடி, வயல்சேரி, சொக்காநாதிருப்பு உட்பட நான்கு கிராமங்கள் உள்ளன. ஊராட்சி தலைவராக பழனிச்செல்வம் இருந்து வருகிறார். பொது தொகுதியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவரான இவர் வெற்றி பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட தேர்தல் பகையால் பல்வேறு நலத்திட்டங்களை இவரால் செயல் படுத்த முடியவில்லை என்று மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆட்சியில் 2017ல் ஐ.ஜி.எப்.எப். திட்ட நிதியில் பிரமனூர் மந்தையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஆர்.ஓ. பிளாண்ட் 2018ல் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.5க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை அதிமுகவினர் சிலர் ஆக்கிரமித்து கொண்டு தற்போதைய ஊராட்சி தலைவரிடம் குடிநீர் நிலைய சாவியை தர மறுப்பதாகவும், விற்பனை செய்யும் குடிநீருக்கான பணத்தையும் ஊராட்சிக்கு செலுத்துவதில்லை என்றும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து குடிநீர் நிலையத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post திருப்புவனம் அருகே குடிநீர் நிலையம் ஆக்கிரமிப்பு ஊராட்சி தலைவர் புகார் appeared first on Dinakaran.