தூத்துக்குடி: கொரோனா காலத்தில் மக்களுக்கு நிதி உதவி அளிக்க முன்வராத பிரதமர் மோடி 8 ஆயிரம் கோடி ரூபாயில் இரண்டு சொகுசு விமானங்கள் வாங்கியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து காயல்பட்டிணத்தில் வாக்கு சேகரித்த அவர், மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். அங்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை அடுத்து இது காயல்பட்டிணம் அல்ல கலைஞர்பட்டிணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரேநாள் இரவில் 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க நேரிட்டதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
'பணமதிப்பிழப்பு அறிவித்து மக்களை தெருவில் நிற்க வைத்தவர் மோடி'...'மோடி என்ன சொன்னாலும் அப்படியே செய்பவர் பழனிசாமி'!: உதயநிதி தாக்கு..!!
