பில்வாரா: ராஜஸ்தான் மாநிலத்தில் குடிநீரை இரவு நேரத்தில் கொள்ளையடித்துச் செல்லாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் டிரம்களுக்கு பூட்டுப் போட்டு மக்கள் பாதுகாத்துவருகின்றனர். வடமாநிலங்களில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பலநூறு அடிக் கிணற்றுக்குள் இறங்கி மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.
மக்கள் மிகவும் துயரப்பட்டு குடிக்கக் கொண்டு செல்லும் தண்ணீரை இரவு நேரங்களில் சிலர்திருடிச்செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு குடிநீரை பாதுகாக்க மக்கள்பூட்டு போட்டுப் பாதுகாக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டம், பரஸ்ராம்புரா கிராமத்தில் வாழும் மக்களுக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 45 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருவதால், கடும்வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக மாறி இருக்கிறது.
தங்கள் வீட்டின் முற்றத்தில் பெரிய டிரம்களில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை இரவுநேரத்தில் சிலர் திருடிச் சென்று விடுகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் அனைவரின் வீடுகளிலும் தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் டிரம்களில் பூட்டுப் போட்டு வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!