×

திமுக மாநகர் பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா போட்டி

மதுரை, அக்.8: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மாநகர் பொறியாளர் அணி சார்பில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி மதுரையில் நடந்தது. கோ.புதூரில் உள்ள தொன்போஸ்கோ ஐடிஐயில் தொழிற்கல்வி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ துவக்கி வைத்து பேசினார்.

உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர் குழந்தைவேலு, பகுதி செயலாளர் ஜீவா, வட்டச்செயலாளர் ஆர்.ஆர்.மகேந்திரன், பொறியாளர் மாநகர் மாவட்ட அணி தலைவர் சிவமுருகன், துணைத்தலைவர் அன்புசெல்வன், அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர்கள் சரவணக்குமார், கருப்பசாமி என்ற சதீஷ், அருண்பாலாஜி, மதி (எ) அஜித், சபரி, கிருஷ்ணா, யுகில்கிஷோர், சஷ்டிதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post திமுக மாநகர் பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Quiz Competition ,DMK Municipal Engineer Team ,Madurai ,DMK Municipal Engineering Team ,Artist Centenary ,Dinakaran ,
× RELATED பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான்...