திமுக ஊராட்சி தலைவர்கள் மதுரா செந்திலிடம் வாழ்த்து

திருச்செங்கோடு: மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தியதற்காகவும், கொரோனா காலத்தில் சிறப்பான சேவை புரிந்ததற்காகவும் தேவனாங்குறிச்சி ஊராட்சி தலைவர் அருண்குமார், அணிமூர் ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வன் ஆகியோருக்கு, டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில், ஒன்றிய தரைவழிப் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே சிங் பதக்கம், கேடயங்களை வழங்கினார். விருது பெற்ற ஊராட்சி தலைவர்கள் அருண் குமார் மற்றும் தாமரைச்செல்வன் ஆகியோர், நேற்று தாங்கள் பெற்ற விருதுகளை, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்திலிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

The post திமுக ஊராட்சி தலைவர்கள் மதுரா செந்திலிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: