திண்டுக்கல், அக். 31: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில், பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முன் தினம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகணேஷ் (21), சையத் இப்ராஹிம் (26), ரேணுகா (29), மணி (21), தனபாலன் (20),வினோத் பாண்டியன் (23).ரதின் (20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர், மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (31) ஆகிய 9 நபர்களை தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த நகைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post திண்டுக்கல்லில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் கைது appeared first on Dinakaran.